புதிய ஓய்வூதியங்களைத் தயாரித்தல்.
ஓய்வூதியத் திட்டத்தில் கடைசியாக பணியாற்றிய நிறுவனத்திலிருந்து ஓய்வூதியக் கோப்பை பெற்றுக்கொண்ட பிறகு, ஓய்வூதியத்தைத் தயாரிப்பதற்கு பின்வரும் ஆவணங்ளை சமர்ப்பிக்க வேண்டும்.
- ஓய்வூதிய அடையாள அட்டை.
- சம்பந்தப்பட்ட பிரதேசத்தின் கிராம உத்தியோகத்தரிடமிருந்து பெறப்பட்ட வதிவிடச் சான்றிதழ்.
- வங்கிப் புத்தகத்தின் முதல் பக்கத்தின் நிழற்பிரதியொன்று.
- ஓய்வு அறிவிப்பு.
விதவைகளின் ஓய்வூதியத்தை தயாரித்தல்.
ஓய்வூதியத்தை நிறுத்துவதற்கு ஓய்வூதியம் பெறுபவர் இறந்ததும் அது பற்றி எங்கள் அலுவலகத்திற்கு அறிவித்தல் வேண்டும். அத்துடன் இறப்புச் சான்றிதழின் கோவை அலுவலகத்திற்கு கிடைக்கப் பெற்றதும் இறப்புச் சான்றிதழின் நிழற்பிரதி மற்றும் விதவைகள் ஓய்வூதிய இலக்கம் ஆகியவற்றை குறிப்பிட்டு விதவை ஓய்வூதியம் கோரிய கோரிக்கைக் கடிதம் ஒன்று சமர்ப்பிக்கப் படல் வேண்டும். ஓய்வூதிய திணைக்களத்தில் விதவைகள் அநாதைகள் பிரிவிலிருந்து விதவைகள் அநாதைகள் ஓய்வூதியக் கோவை எங்கள் பிரதேச செயலகத்திற்கு அனுப்பப் பட்டுள்ளமையைக் குறிப்பிட்டு ஒரு கடிதம் கிடைத்தததும் பின்வரும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
- திருமண சான்றிதழின் மூலப்பிரதியும் நிழற்பிரதியும்.
- பெயரில் ஒரு வேறுபாடு இருந்தால், சத்தியக்கடதாசி.
- மரண சான்றிதழின் மூலப்பிரதியும் நிழற்பிரதியும்.
- ஓய்வூதியம் பெறும் சம்பளத் தாளின் நிழற்பிரதியும்.
- 21 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ்கள்.
- 3 ¼, 2 ¼ அளவிளான புகைப்படங்கள் மூன்று - கிராம நிலதாரியினால் சான்றுபடுத்தப்பட்டு வழங்கப்படவேண்டும்.
- தேசிய அடையாள அட்டையின் பிரதி.
- சிறிய படிவத்தை கிராம உத்தியோகத்தருக்கு சமர்ப்பிக்கவும்.
- ஓய்வூதியம் நிறுத்தப்படுதல் பற்றி பிரதேச செயலகத்தில் இருந்து பெறப்பட்ட கடிதம்.
- விதவை / தபுதாரரின் பிறந்த சான்றிதழ்.
ஓய்வூதிய நிதி படிவம் 15 மற்றும் கிராம நிலதாரியிடமிருந்து பெறப்படும் ஏனைய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
அநாதைகளின் ஓய்வூதியம் தயாரித்தல்.
இறப்புச் சான்றிதழ் கோவை எங்கள் அலுவலகத்திற்கு கிடைக்கப் பெற்றதும் ஓய்வூதிய திணைக்களத்தின் விதவைகள் அநாதைகள் பிரிவிலிருந்து விதவைகள் அநாதைகள் ஓய்வூதியக் கோவை எங்கள் பிரதேச செயலகத்திற்கு அனுப்ப பட்டுள்ளமையை குறிப்பிட்டு கடிதமொன்று கிடைத்தததும் அநாதைகள் பின்வரும் ஆவணங்களை சமர்ப்பித்தல் வேண்டும்.
- குழந்தையின் பிறப்புச் சான்றிதழ்.
- தாய் மற்றும் தந்தையின் மரணச் சான்றிதழ்கள்.
- தாய் மற்றும் தந்தையின் திருமணச் சான்றிதழ்.
- பாதுகாவலர் 18 ஆண்டுகளுக்கு குறைவாக இருந்தால் 21 க்கு மேற்பட்ட 5 / 1.6,7,8 விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
அங்கவீனர் ஓய்வூதியம் தயாரித்தல்.
பெற்றுக்கொணடிருந்த ஓய்வூதியத்தை அல்லது விதவையின் ஓய்வூதியம் நிறுத்தப்பட்ட ஓய்வூதியம் பெறுபவர் இறந்ததும் அது பற்றி எங்களுடைய அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட வேண்டும். அத்துடன் பின்வரும் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப் படல் வேண்டும்.
- நிரந்தரமாக ஊனமுற்ற நபர்களுக்கான ஓய்வூதியம். (ஊன 01)
- ஊனமுற்ற சிறுவன்/ சிறுமியின் பாதுகாவலர்கள் வழங்கும் வாக்குமூலம். (ஊன 02)
இயலாமை ஓய்வூதியம் தொடர்பான அடிப்படை சோதனைகளுக்காக எம்மால் வழங்கப்படும் நாள் மற்றும் நேரத்தின் போது எங்களது அலுவலகத்திற்கு சமூகமளிக்க வேண்டும். பாதுகாவலரும் தேவைப்பட்டால், அந்த நபரும் ஆரம்ப பரிசோதனைகளில் சமூகமளித்து இருக்க வேண்டும்.
- ஓய்வூதியம் அல்லது விதவையின் ஓய்வூதியத்தை நிறுத்த எங்கள் பிரதேச செயலகத்திற்கு அது பற்றி அறியத் தரல் வேண்டும்.
- இத்தொகையை ஒருவருக்கு வழங்குவதில் ஏனைய வாரிசுகளுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என தெரிவிக்கும் சமாதான நீதவனால் கையொப்பமிடப் பட்ட ஒரு கடிதம். (திருமணமான / திருமணமாகாத அனைவரிடமிருந்தும்)
- குடும்பத்தின் உரிமையாளர்களாயின் , மரணித்தவருக்கு உள்ள உறவு முறை, வயது, பால், இனம், குடும்ப உறுப்பினர்கள் தொடர்பான விபரம் என்பன அடங்கிய கிராம சேவகரின் அறிக்கை. ( அதை பிரதேசசெயலார் மேலொப்பமிடல் வேண்டும்)
- படிவம் 77
- இந்தப் பணத்தை ஒரு காசோலையினூடாக செலுத்தப்பட வேண்டியிருப்பதால் வங்கி கணக்கு இலக்கம் மற்றும் வங்கியின் பெயர் என்பவற்றை குறிப்பிடல் வேண்டும்.
வாரிசு கொடுப்பனவு.
இந்தப் பணத்தை ஒரு காசோலையினூடாக செலுத்தப்பட வேண்டியிருப்பதால் வங்கி கணக்கு இலக்கம் மற்றும் வங்கியின் பெயர் என்பவற்றை குறிப்பிடல் வேண்டும்.
- சிவில். (படிவ இலக்கம் 128)
- விதவைகள். (படிவ இலக்கம் 129)
- அங்கவீனர்.(படிவ இலக்கம் 130)
{sliderஓய்வூதிய அடையாள அட்டை தயாரித்தல். |closed}
- சேதமடைந்த அல்லது கொள்ளையிடப்பட்ட அடையாள அட்டைக்கு ஒரு புதிய ஓய்வூதிய அடையாள அட்டையை வழங்குதல்.
- சேதமடைந்த அடையாள அட்டை.
- கிராம சேவகர் 3/2 * 2¼ அங்குல அளவுகளிலான இரண்டு புகைப்படங்களை சான்றுபடுத்தல்.
- கோரிக்கைக் கடிதம்.
















