காணி நிர்வாகம்
- காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டம் மற்றும் காணி சமர்ப்பித்தல் விசேட சட்டம் மற்றும் அரச காணிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் அரசின் வெறுமையான காணிகளை, கிராமங்ளை விசாலப்படுத்துவதற்காக பகிர்ந்தளித்தல்.
- காணிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் பகிர்ந்தளித்த காணிகள் தொடர்பான பின் நடவடிக்கைகள்.
அசல் உரிமையை வழங்கல்.
தேவையான ஆவணங்கள்.
- பிரதேச செயலாளருக்கான கோரிக்கை கடிதம்.
- மானியம் / நன்கொடைப் பத்திரம் மற்றும் காணியின் வரைபடத்தின் மூலப்பிரதி, நிழற்பிரதிகள்.
- இரு மடித்தாளின் (“பத்திரு ”) குறிப்புகள்.
- நிலத்தின் குடியிருப்பாளர்களைப் பற்றிய கிராம உத்தியோகத்தரின் அறிக்கை.
- நன்கொடை பத்திரம் (Grant) வைத்திருப்பவரின் வாரிசுதாரர்கள் பற்றிய கிராம உத்தியோகத்தரின் அறிக்கை – வயது அடிப்டையில் பிறந்த திகதியுடன்.
- முதல் உரிமையை வழங்குவதில் அனைத்து வாரிசுகளும் விருப்பத்தை தெரிவிக்கும் கடிதம் - ரூ .25 / - முத்திரை ஒட்டப்பட்டு சமாதான நீதவான் முன்னிலையில் உறுதிப்படுத்தியிருக்க வேண்டும்.
- மானியதாரர் / கணவன் / மனைவியின் மரணச் சான்றிதழ்.
- ஒரு வாரிசு இறந்துவிட்டால், மரணச் சான்றிதழின் மூலப்பிரதியும் நிழற்பிரதியும்.
பின்னைய பரம்பரை உரிமையை வழங்கல்.
தேவையான ஆவணங்கள்.
- பிரதேச செயலாளருக்கான கோரிக்கை கடிதம்.
- நன்கொடை பத்திரம் மற்றும் காணியின் வரைபடத்தின் மூலப்பிரதி மற்றும் நிழற்பிரதிகள்.
- நிலத்தை பற்றிய இருமடித்தாளின்(“பத்திரு ”) குறிப்புகள்.
- காணியின் உரிமையாளர் பற்றிய கிராம உத்தியோகத்தரின் அறிக்கை.
- வாரிசுகள் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தகுதி பெற்ற நிலஅளவைளரினால் வழங்கப்பட்ட காணியின் வரைபடத்தின் மூலப்பிரதியும் நிழற்பிரதியும்.
- அடுத்தடுத்த வாரிசுகளின் பிறப்பு சான்றிதழ்களின் மூலப்பிரதிகளும் நிழற்பிரதிகளும்.
- அடுத்த பரம்பரை உரிமை தனது விருப்பத்திற்கமைய பெயரிடப் படுகின்றமைக்கான வாக்குமூலம் (சமாதான நீதவான் முன் ரூ 50 முத்திரை இல் கையெழுத்திடப் பட்டுருத்தல் வேண்டும்.)
- மானியம் வைத்திருப்பவரின் வாய்மூல அறிவிப்பு.
- விண்ணப்பப்படிவத்தை பூர்த்திசெய்து முதல் பக்கத்தில் இரண்டு சாட்சிகளில் ஒருவராக கிராம சேவகர் கையெழுத்திட வேண்டும்.
- அனைத்து எதிர்கால வாரிசுகளாளும் பிரதேச செயலாளர் முன்னிலையில் வாய்வழி அறிவிப்பு வழங்கப்பட வேண்டும் என்பதால் அறிவிக்கப்படும் தினத்தில் தேசிய அடையாள அட்டையுடன் அலுவலகத்திற்கு சமூகமளிக்க வேண்டும்.
மானிய விதிகளை தளர்த்தல்
தேவையான ஆவணங்கள்
- மானியம் பெற்றவரின் கோரிக்கைக் கடிதம்.
- இணைப்பு 1 படிவத்தின் மூலம் மாகாணக் காணி ஆணையாளரின் அனுமதியினைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் இணைப்பு 2 படிவத்தின் மூலம் மானியதாரர் கையொப்பமிடல் மற்றும் இரண்டு சாட்சிகளின் கையொப்பங்களைப் பெற்றுக் கொள்ளல்.
- காணியின் உரிமைப் பத்திரத்தை அரசாங்கத்திற்கு ஒப்படைத்தல்.
- பல படிமுறைகளுக்குப் பிறகு புதிய மானியத்தை தயாரித்த பின்னர் “ ரன்பிம” சேவை கட்டணம் ரூ .100 / - அறவிடப்பட்டு புதிய மானியத்தை சமர்ப்பித்தல்.
காணி / நில உரிமையை அகற்றல்.
தேவையான ஆவணங்கள்.
- அரசாங்கக் காணி உரிமையை மாற்றுவதற்காக ஒரு படிவம் இணைக்கப்பட்டுள்ளது
மானியத்தால் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளிலிருந்து கடன் பெற வழிவகுத்தல்.
தேவையான ஆவணங்கள்
- பிரதேச செயலாளருக்கான கோரிக்கை கடிதம். (பொருத்தமான வங்கிக் கிளையின் பெயர் மற்றும் முகவரி)
- அரசாங்க காணியின் உரிமையை மாற்றுதல்.
- மானியத்தின் மூலப்பிரதி மற்றும் நிழற்பிரதிகள்.
- ஒளிப்பதிவு இருமடித்தாளின் (“பத்திரு”) குறிப்புகள்.
ஸ்வர்ணபூமி, ஜெயபூமி, ரன்பீம காணியின் உரிமையை வேறு ஒருவருக்கு வழங்கும் போது, பின்வரும் தகுதிகளை பெற்றிருத்தல் வேண்டும்.
- வழங்கப்படுபவர் மானியம் பெற்றவரின் இரத்த உறவு முறையாகவும் குறைந்தபட்ச வருமானம் பெறுபவராகவும் இருத்தல் வேண்டும்.
- காணியின் ஒரு பகுதி மாத்திரம் வழங்கப்படுமாயின் அந்நிலத்திற்கான நன்கொடை பத்திரம் இடைக்கால பிரிவுகளில் வழங்க அனுமதிக்கப்பட்ட நன்கொடை பத்திரமாக இருத்தல்.
- இடைக்கால பிரிவுகளில் அனுமதிக்கப்பட்ட நன்கொடை பத்திரமாக இல்லாத பட்சத்தில் இடைக்கால பிரிவுகளில் அனுமதிக்கப்பட்ட நன்கொடை பத்திரமாக நிபந்தனை இடப்பட வேண்டும். அதற்கான நிலத்தின் அளவு 15 பேர்சஸ் அல்லது அதிகமாக இருக்க வேண்டும். தேவையான ஆவணங்கள்
- உரிமையாளர் கோரிக்கை கடிதம் . அதில் உரிமையாளர் கையெழுத்திட வேண்டும். (அல்லது அந்த இடத்தில் கைரேகைகளை பதிக்க வேண்டும்).
- இடமாற்றம் செய்யப்படும் காணியின் மூலப் பிரதியும் நிழற்பிரதியும்.
- ஒரு வாரத்திற்குள் பெற்றுக் கொள்ளப் பட்ட இருமடித்தாள் "பத்திரு" (கடைசி பக்கம் வரை)
- உரிமை வழங்கப்படுபவர் இரத்த உறவாயின் அதனை உறுதிசெய்யும் ஆவணங்கள் . (பிறப்பு, திருமண மற்றும் இறப்பு சான்றிதழ்களின் மூலம் உறுதி செய்யலாம்)
- உரிமை வழங்கப்படுபவரின் வருமானம் தொடர்பான குறித்த கிராம உத்தியோகத்தரின் அறிக்கை.
- உரிமை வழங்கப் படுபவருக்கு சொந்தமான மற்ற சொத்துக்கள் பற்றிய கிராம சேவகரின் அறிக்கை.
- நிலத்தின் உரிமை மாற்றுவதற்கான உரிமையாளரின் (கணவன், மனைவி மற்றும் குழந்தைகள்) வாக்குமூலம்.
- நிலத்தின் உரிமை மாற்றுவதால் அந்நபர் ஏழை அல்லது அநாதையாக்கப் பட மாட்டார் என உறுதிப்படுத்தும் ஆவணங்கள் மற்றும் நிலத்தின் உரிமை மாற்றுபவருக்கு வேறு காணிகள் இருப்பதை உறுதிப்படுத்தும் வாக்குமூலம் , அந்நபருக்கு சொந்தமான காணிகளின் உரிமைப் பத்திரம்.
- காணியின் ஒரு பகுதி மாத்திரம் வழங்கப்படுமாயின் அப்பகுதி நில அளவையாளரினால் தயாரிக்கப்பட்ட வரைபடம், குறித்த வரைபடத்தின் பகுதியாக இருந்தால், நில அளவைக்கு தொடர்புடைய குறித்த வரைபடம் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
- மற்றொரு பிரதேச செயலாளர் பிரிவின் கிராம உத்தியோகத்தர் ஒருவர் மூலம் அத்தகைய ஆவணங்கள் சான்று படுத்தப்படல் வேண்டும்.
- அனைத்து சான்றிதழ்களின் மூலப்பிரதிகளையும் நிழற்பிரதிகளையும் சமர்ப்பித்தல் வேண்டும்.
அரசாங்கத்தின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களுக்கு கையளிக்கப்பட்ட தனியார் காணிகளின் உரிமையாளர்களுக்காக
- இழப்பீட்டு விண்ணப்பம். (இழப்பீட்டுக் கோரிக்கைக் கடிதம்)
- கைப்பற்றிய காணியின் உரிமைப் பத்திரம்.
- கைப்பற்றிய காணியின் வரைபடம்.
- 10 வருடங்களுக்கும் அதிகமான அனுபவமுள்ள ஒரு வழக்கறிஞரிடமிருந்து பெறப்பட்ட காணியின் தலைப்பு அறிக்கை.
- நிலம் தொடர்பான 2 வாரங்களுக்கு மேற்படாத இருமடித்தாள் (“ பத்இரு”).
- அடையாளத்தை உறுதிப்படுத்தும் தேசிய அடையாள அட்டை.
பண அறவீடு
- ரூபா 25,000 / - க்கு மேற்பட்டவைக்கு ரூபா 25 பெ றுமதியான முத்திரைக் கட்டணம்
02.கைப்படுத்துதல் சட்டத்தின் 38 (அ) பிரிவின் கீழ் வர்த்தமனி வெளியிட்ட திகதியிலிருந்து இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்ட திகதி வரையான காலப் பகுதிக்கான இழப்பீட்டுத் தொகைக்கான வட்டியை வழங்குதல்.
தேவையான ஆவணங்கள்
இழப்பீடு பெறுவதற்கு தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் மற்றும் வட்டி பெற்றுக்கொள்வதற்கு ஒரு கோரிக்கை கடிதம் சமர்ப்பிக்க வேண்டும்.
பண அறவீடு
- வட்டி வழங்கப்படும் போது அதில் 10% தேசிய வருமான ஆணையாளருக்கு செலுத்துதல் வேண்டும்.
- வட்டி வழங்கப்படும் போது ரூபா 25,000 / - க்கு மேற்பட்டவைக்கு ரூபா 25 பெறுமதியான முத்திரைக் கட்டணம்.
03. காணி உரிமையாளர்களுக்காகக் "லாக்" கூட்டம் நடாத்துதல் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குதல்.
தேவையான ஆவணங்கள்.
இழப்பீடு வழங்குவதற்கு சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களுக்கு மேலதிகமாக, கொடுப்பனவை பெற்றுக் கொள்வதற்கு ஒரு விண்ணப்பக் கடிதம் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
பண அறவீடு
- லாக் கொடுப்பனவுகளை வழங்கும் போது ரூபா 25,000 / - க்கு மேற்பட்டவைக்கு ரூபா 25 பெறுமதியான முத்திரைக் கட்டணம்
















